
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறங்கம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா நிகழ்த்தியுள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி இன்றைய 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டிக்காக காத்துக்கொண்டிருந்த நிலையில், நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் நேரலையை தொலைக்காட்சியில் பார்த்தவாறு இந்திய வீரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த காணொளியை பிசிசிஐ தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதே மகிழ்ச்சியுடன் இன்று அயர்லாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டியில் விளையாட இருக்கின்றனர். இந்தப் போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடக்க உள்ள முகாமில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
Witnessing History from Dublin!
— BCCI (@BCCI) August 23, 2023
The moment India's Vikram Lander touched down successfully on the Moon's South Pole #Chandrayaan3 | @isro | #TeamIndia https://t.co/uIA29Yls51 pic.twitter.com/OxgR1uK5uN