
22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், நடப்பாண்டு ஜூலை 22ஆஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளது. இந்த முறை மகளிா் டி20 கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டாக சோ்க்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் சோ்க்கப்பட்டிருப்பது இது 2ஆஆவது முறையாகும். இதற்கு முன், முதல் முறையாக கடந்த 1998-இல் கோலாலம்பூரில் நடைபெற்ற போட்டியில் ஆடவா் கிரிக்கெட் 50 ஓவா் ஆட்டமாக விளையாடப்பட்டது. அதில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஷான் பொல்லாக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி தங்கம் வென்றிருந்தது.
இந்நிலையில், 24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தற்போது கிரிக்கெட் சோ்க்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்காக ஏற்கெனவே இந்தியா உள்பட 7 அணிகள் இணைந்திருந்தன. இந்நிலையில், இலங்கையும் சமீபத்தில் தகுதிச்சுற்று ஆட்டத்தில் வென்று தனக்கான இடத்தை உறுதி செய்து கடைசி அணியாக கடந்த வாரம் இணைந்தது.