காட்டடி அடித்த டிம் டேவிட்; அசாத்தியமான கேட்ச் பிடித்த டெம்பா பவுமா - வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணியின் டிம் டேவிட் அடித்த பந்தை தென் ஆப்பிரிக்க வீரர் டெம்பா பவுமா ஓடிவந்து நம்ப முடியாத அளவிற்கு காற்றில் பறந்து பிடித்த அசாத்தியமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மிட்சல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று டர்பன் நகரில் நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்னயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவு ஆறு விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் 49 பந்துகளை சந்தித்து 92 ரன்களையும், டிம் டேவிட் 28 பந்துகளை சந்தித்து 64 ரன்களையும் குவித்து அசத்தினர்.
Trending
பின்னர் 227 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது ஆஸ்திரேலியா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக 6 ஆவது வீரராக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் டேவிட் 28 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 64 ரன்கள் எடுத்த அதிரடி காட்ட ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் கிடுகிடு வென உயர்ந்தது.
Temba Bavuma pulls off a screamer #SAvAUS pic.twitter.com/llsZLj6t0W
— FanCode (@FanCode) August 30, 2023
இறுதியில் அவர் ஷம்ஸி வீசிய பந்தை தூக்கி அடிக்க பவுண்டரி லைனில் இருந்த டெம்பா பவுமா ஓடிவந்து நம்ப முடியாத அளவிற்கு காற்றில் பறந்து பிடித்த அசாத்தியமான கேட்ச் மூலம் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில் டெம்பா பவுமா பிடித்த இந்த கேட்ச் குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now