முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஹர்திக் பாண்டியா!
நாங்கள் வெளியில் இருந்து என்ன சத்தம் வந்தாலும் அதை வெளியில் வைத்து, எப்படி நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது என்று மட்டுமே யோசிக்கிறோம் என்று இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி ஆறு நாட்கள் கொண்ட பயிற்சி முகாமில் ஆலூரில் கலந்து கொண்டு, இன்று பாகிஸ்தான் அணியை சந்திப்பதற்காக இலங்கை சென்று அடைந்திருக்கிறது. இந்த அணி உடன் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லாத கேஎல் ராகுல் செல்லவில்லை. அவர் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமி கண்காணிப்பில் இருப்பார் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே இந்திய அணி நிர்வாகம் மற்றும் வீரர்கள் மீது, இந்திய லெஜெண்ட் வீரர்களான கபில்தேவ் மற்றும் கவாஸ்கர் சில கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார்கள். குறிப்பாக கபில்தேவ் மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
Trending
இந்நிலையில் பாகிஸ்தான் போட்டி குறித்து பேசிய இந்தியா அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி உங்கள் குணாதிசயத்தையும், உங்கள் ஆளுமையையும் பரிசோதிக்கும் ஒரு களமாகும். அதே நேரத்தில் நீங்கள் எவ்வளவு அழுத்தத்தை தாங்க கூடியவராக இருப்பீர்கள் என்பதை நீங்கள் கண்டுபிடிக்கலாம். இந்த காரணங்களால் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி என்னை உற்சாகப்படுத்துகிறது.
ரசிகர்களால் இது மிகவும் உணர்வுபூர்வமாக இணைக்கப்பட்ட ஒரு போட்டி. எங்களைப் பொறுத்தவரை ஒரு சிறந்த அணியாக இணைந்து, சில காலமாக சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வரும் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என்பது மட்டும்தான். நாங்கள் வெளியில் இருந்து என்ன சத்தம் வந்தாலும் அதை வெளியில் வைத்து, எப்படி நல்ல கிரிக்கெட்டை விளையாடுவது என்று மட்டுமே யோசிக்கிறோம். இதைப் பற்றி எல்லாம் எங்களால் உணர்ச்சிவசப்பட்டு கொண்டு இருக்க முடியாது.
ஒரு கிரிக்கெட் வீரராக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு என்ன தேவையோ நான் அந்த விதத்தில் தயாராகிறேன். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சூழ்நிலையே உங்களுக்கு சொல்லிவிடும். நிலைமைக்கு ஏற்றார் போல் விளையாடினால் போதும். இதற்கு ராக்கெட் சயின்ஸ் எல்லாம் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now