Advertisement

பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்; புதிய அறிவிப்பை வெளிட்ட கிரிக்கெட் வாரியம்!

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரை வெல்லும் அணிக்கு பெனாட் - காதிர் கோப்பை வழங்கப்படவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 02, 2022 • 17:51 PM
Test Series Between Pakistan & Australia To Be Called 'Benaud-Qadir' Trophy
Test Series Between Pakistan & Australia To Be Called 'Benaud-Qadir' Trophy (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 

கடந்த 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளும் இதுவரை 25 டெஸ்டுகளில் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 13 டெஸ்டுகளிலும் பாகிஸ்தான் 7 டெஸ்டுகளிலும் வென்றுள்ளன. 1998இல் பாகிஸ்தானுக்கு வந்த மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது. 

Trending


இந்நிலையில் பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு பெனாட் - காதிர் கோப்பை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இரு முன்னாள் லெக் ஸ்பின்னர்களான ரிச்சி பெனாட் (ஆஸ்திரேலியா), அப்துல் காதிர் (பாகிஸ்தான்) ஆகியோரின் பங்களிப்புகளைக் கெளரவிக்கும் விதமாக இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெனாட் - காதிர் கோப்பையை இரு அணி கேப்டன்களும் இன்று அறிமுகம் செய்துவைத்தார்கள். 

ரிச்சி பெனாட், ஆஸ்திரேலிய அணிக்காக 1952 முதல் 1964 வரை 63 டெஸ்டுகளில் விளையாடி 248 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அப்துல் காதிர் பாகிஸ்தான் அணிக்காக 1977 முதல் 1993 வரை 67 டெஸ்டுகளிலும் 104 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடி டெஸ்டில் 236 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 132 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement