
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று தாய்லாந்தில் உயிரிழந்தார். மாரடைப்பால் திடீரென உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட போதும், அவரின் மரணத்தில் மர்மங்கள் சூழ்ந்துள்ளன.
ஷேன் வார்னே மற்றும் அவரது 3 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தான் தாய்லாந்திற்கு சுற்றுலா போன்று சென்றுள்ளனர். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த போது, வார்னே இரவு உணவிற்கு வராததால் அவருக்கு என்ன ஆயிற்று என்று மற்ற நண்பர்கள் பார்க்க சென்றுள்ளனர். ஆனால் அங்கு எந்தவித உணர்ச்சிகளும் இன்றி வார்னே கிடந்துள்ளார்.
இதனையடுத்து வார்னேவுக்கு நண்பர் ஒருவர் சிபிஆர் முதலுதவி செய்து பார்த்ததாகவும், அது பலனளிக்காததால்,ஆம்புலன்ஸை அழைத்ததாகவும் காவல்துறையிடம் அந்த 3 நண்பர்களும் தெரிவித்திருந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் வந்த பிறகு 20 நிமிடங்கள் வரை சிபிஆர் செய்த பார்த்த பிறகே அவர் உயிர் பிரிந்தது உறுதிப்படுத்தப்பட்டது.