அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்; வைரல் காணொளி!
பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னிற்கு ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தார்.
டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடர் 2022 சூப்பர் 12 சுற்றின் 4ஆவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஓபனர்கள் முகமது ரிஸ்வான் 4 (12), பாபர் அசாம் 0 (1) ஆகியோர் சொதப்பிய நிலையில், அடுத்து ஷான் மசூத் 52, இஃப்திகார் அகமது 51 ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள். மற்ற பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் எடுத்த நிலையில், இறுதியில் ஷாஹீன் அப்ரீதி 16 ரன்களை சேர்த்து அசத்தினார். இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 159/8 ரன்களை சேர்த்தது.
Trending
இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ராகுல், ரோஹித் தலா 4 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து சொதப்பினார்கள். அடுத்து சூர்யகுமார் 15, அக்சர் படேல் 2 ஆகியோரும் ஏமாற்றிய நிலையில் அடுத்து கோலி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இறுதியில், கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹார்திக் பாண்டியா 40 ஆட்டமிழந்தார். தொடர்ந்து தினேஷ் கார்த்திக் வந்ததால், இவர் ஆட்டத்தை முடித்துக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 5ஆவது பந்தில் 1 (2) ஆட்டமிழந்து இந்திய அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தினார்.
கடைசி பந்தில் 2 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, பந்துவீச்சாளர் ஒயிட் வீசிய நிலையில், அடுத்த பந்தில் அஸ்வின் சிங்கில் எடுத்ததால், இந்திய அணி 20 ஓவர்களில் 160/6 ரன்களை சேர்த்து, 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 82 ரன்களை குவித்து, கடைசிவரை களத்தில் இருந்தார்.
Hello Sydney
— BCCI (@BCCI) October 25, 2022
We are here for our nd game of the #T20WorldCup! #TeamIndia pic.twitter.com/96toEZzvqe
இப்போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தால், தினேஷ் கார்த்திக் மீதுதான் மொத்த பழியும் விழுந்திருக்கும். நல்லவேளை இந்திய அணி அஸ்வினால் வென்றுவிட்டது. இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் பேசிய தினேஷ் கார்த்திக், ‘‘என்னை காப்பாற்றியமைக்கு நன்றி அஸ்வின்’’ எனக் கூறினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now