
That's A Massive Goal We'd Like To Achieve Says Devon Conway On Beating India In India (Image Source: Google)
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கிறது.
அதன்படி கான்பூர், மும்பையில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த டெஸ்ட் தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 7ஆம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் பற்றி நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே கூறுகையில், “இந்தியாவை டெஸ்ட் தொடரில் தோற்கடிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் உள்ளோம். இதை நாங்கள் அடையவேண்டும். இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததை விடவும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது சவாலானதாகும். அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.