X close
X close

இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? வியப்பில் ரசிகர்கள்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கும், நியூசிலாந்து வீரர் டேவன் கான்வேவுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை கண்டு ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 04, 2021 • 14:23 PM

கடந்த இரண்டு தினங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் பேசப்படும் நபர் நியூசிலாந்தின் டேவன் கான்வே. இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடிப்படிப்பது இயல்பான ஒன்றாக இருந்தாலும், உலக புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. 

Trending


ஆனால் டேவன் கான்வே தனது அறிமுக போட்டியிலேயே இரட்டை சதாடித்து 230 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். மேலும் இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் அடித்தவர் என்ற சரித்திரத்தையும் படைத்துள்ளார். 

அதேசமயம் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் 25 ஆண்டுகால சாதனையையும் தகர்த்துள்ளார். இந்நிலையில் சௌரவ் கங்குலிக்கும், டேவன் கான்வேவுக்கு இடையேவுள்ள ஒற்றுமைகள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இணையத்தை வலம் வந்து கொண்டிருக்கின்றன. 

அந்த வகையில் இவர்கல் இருவரது பிறந்தநாளும் ஜுன் 8ஆம் தேதி தான். மேலும் இவர்கள் இருவரும் தங்களது முதல் சர்வதேச அறிமுக போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாடியுள்ளனர். 

மேலும் இவர்கள் இருவரும் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 84ஆவது வீரர்களாக அறிமுகமாகியுள்ளனர். மேலும் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இருவரும் அறிமுக போட்டியிலேயே சதமடித்தும் அசத்தியுள்ளனர். இப்படி இருவருக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். 


Win Big, Make Your Cricket Tales Now