Advertisement
Advertisement
Advertisement

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானை குறைவாக எண்ண வேண்டாம் - இயன் ஸ்மித்!

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் நியூசிலாந்து அணி மிகுந்த கவனத்துடன் விளையாட வேண்டியது மிகவும் அவசியமென அந்த அணியின் முன்னாள் வீரர் இயன் ஸ்மித் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan October 26, 2021 • 14:54 PM
'The Bear Is Angry': Ian Smith Warns New Zealand About Hurt Pakistan
'The Bear Is Angry': Ian Smith Warns New Zealand About Hurt Pakistan (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஏற்கெனவே கடந்த மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. 

Trending


பின் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நியூசிலாந்து அணி பாதுகாப்பு காரணங்களினால் தொடரை ரத்து செய்வதாக அறிவித்தது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பெரும் கோபமடைய செய்தது. 

இந்நிலையில் இரு அணிகளும் உலகக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பண்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் நியூசிலாந்து அணி மிகுந்த கவனத்துடன் இப்போட்டியில் விளையாட வேண்டியது மிகவும் அவசியமென அந்த அணியின் முன்னாள் வீரர் இயன் ஸ்மித் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இதுகுறித்து பேசிய இயன் ஸ்மித், “நியூசிலாந்து அணி இப்போட்டியில் மிகுந்த கவத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். ஏனெனில் பாகிஸ்தான் அணி மிகுந்த கோபத்தில் இருக்கிறது. அதனால் அவர்களை குறைவாக எண்ண வேண்டாம்” என்று எச்சரிக்கை செய்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement