
The Hundred 2022: Davies, bowlers keep Brave hopes alive (Image Source: Google)
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சதர்ன் பிரேவ் - ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பைரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், கொஹ்லர் ஆகியோர் தலா 8 ரன்களுடன் நடையைக் கட்டினர். ஒருமுனையில் டேவிட் மாலன் அதிரடியாக விளையாட, மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணமே இருந்தன.
தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட டேவிட் மாலன் அரைசதம் கடந்தது, 59 ரன்களையும் சேர்த்தார். இதன்மூலம் 100 பந்துகள் முடிவில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே சேர்த்தது.