Advertisement
Advertisement
Advertisement

தி ஹண்ட்ரட் : ஓய்வு பின் மிரட்டும் ஈயன் மோர்கன்; லண்டன் ஸ்பிரிட் அபார வெற்றி!

ஓவல் இன்விசிபிள் அணிக்கெதிரான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் லண்டன் ஸ்பிரிட் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 05, 2022 • 11:25 AM
THE HUNDRED 2022: Ellis helps Spirit eke out a narrow win
THE HUNDRED 2022: Ellis helps Spirit eke out a narrow win (Image Source: Google)
Advertisement

தி ஹண்ட்ரட் எனப்படும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஈயன் மோர்கன் தலைமையிலான லண்டன் ஸ்பிரிட் அணியும், ஓவல் இன்விசிபிள் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற ஓவல் இன்விசிபிள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய லண்டன் ஓவல் அணியில் ஸாக் கிரௌலி 21 ரன்னிலும், ரோஸிங்டன் 14 ரன்களிலும், மேக்ஸ்வெல் 18, லாரன்ஸ் 27 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

Trending


அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஈயன் மோர்கன் அதிரடியாக விளையாடிய 29 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி என 47 ரன்களைச் சேர்த்து அசத்தினார். மேலும் சர்வதேச ஓய்வு பின் களமிறங்கிய மோர்கன் முதல் போட்டியிலேயே அதிரடி காட்டியது ரசிகர்களை கவர்ந்தது.

இதன்மூலம் 100 பந்துகளில் லண்டன் ஸ்பிரிட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைச் சேர்த்தது. ஓவல் அணி தரப்பில் முகமது ஹஸ்னைன், சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய ஓவல் அணியில் ஜேசன் ராய் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வில் ஜேக்ஸ், சாம் கரண், சாம் பில்லிங்ஸ் என சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோர்டன் கஸ் - ஹில்டன் கெட்ரைட் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஜோர்டன் கஸ் 39  ரன்களிலும், ஹில்டன் கெட்ரைட் 42 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் 100 பந்துகள் முடிவில் ஓவல் இன்விசிபிள் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை மட்டுமே சேர்த்தது. லண்டன் ஸ்பிரிட் அணி தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் லண்டன் ஸ்பிரிட் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் ஓவல் இன்விசிபிள் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement