Advertisement

தி ஹெண்ட்ரெட்: வேல்ஸ் ஃபையரை வென்றது ஓவல் இன்விசிபிள்!

வேல்ஸ் ஃபையருக்கு எதிரான தி ஹெண்ட்ரெட் லீக் ஆட்டத்தில் ஓவல் இன்விசிபிள் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

Advertisement
THE HUNDRED 2022: Jacks, Narine and Tom Curran power Invincibles to commanding win
THE HUNDRED 2022: Jacks, Narine and Tom Curran power Invincibles to commanding win (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 08, 2022 • 12:16 AM

தி ஹெண்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வேல்ஸ் ஃபையர் அணி, ஓவல் இன்விசிபிள் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற வேல்ஸ் ஃபையர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 08, 2022 • 12:16 AM

அதன்படி களமிறங்கிய ஓவல் இன்விசிபிள் அணியில் ஜேசன் ராய் 10 ரன்களிலும், ரொஸ்ஸோவ் 5 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் 14 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Trending

ஆனாலும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தை வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்ததுடன், 45 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 81 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 100 பந்துகள் முடிவில் ஓவல் இன்விசிபிள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வேல்ஸ் ஃபையர் அணிக்கு ஜோ கிளார்க் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கிளார்க் 37 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த டாம் பாண்டன் 15, பென் டக்கெட் 25, ஒல்லி போப் 0, டேவிட் மில்லர் 3, ஜோஷ் காப் 11 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 100 பந்துகள் முடிவில் வேல்ஸ் ஃபையர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஓவல் இன்விசிபிள் அணி தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் ஓவல் இன்விசிபிள் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வேல்ஸ் ஃபையர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement