
The Hundred 2022: Sam Cook stars as Trent Rockets hoist The Hundred title (Image Source: Google)
இங்கிலாந்தில் நடைபெற்றுவந்த ஹண்ட்ரெட் எனப்படும் 100 பந்துகளைக் கொண்ட கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி, ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ர மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியில் பில்ப் சால்ட், லௌரி எவன்ஸ், மேட்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் களமிரங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - டர்னர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். ஸ்டப்ஸ் 18, டர்னர் 26 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களோடு வெளியேறினர்.