
The Hundred Mens : Neesham, Bairstow make it two in two for Welsh Fire (Image Source: Google)
தி ஹண்ரட் ஆடவர் தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் ஜானி பேர்ஸ்டோவ் தலைமையிலான வெல்ஷ் ஃபையர் அணியும், ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான சர்தர்ன் பிரேவ் அணியும் விளையாடின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய வெல்ஷ் ஃபையர் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - டாம் பாண்டன் இணை அதிரடியான தொடக்கத்தைத் தந்து, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
இதில் பாண்டன் 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வந்த பேர்ஸ்டோவ் அரைசதம் கடந்தார். இதையடுத்து களமிறங்கிய டக்கெட்டும் அரைசதம் கடந்து அசத்தினார்.