
The Hundred Womens : London Spirit Women won by 3 wkts (Image Source: Google)
தி ஹண்ரட் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் லீக் ஆட்டத்தில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணி, லண்டன் ஸ்பிரிட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற லண்டன் ஸ்பிரிட் மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பர்மிங்ஹாம் அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக எவ்லின் ஜோன்ஸ் 47 ரன்களையும், ஏமி ஜோன்ஸ் 33 ரன்களையும் சேர்த்தனர். லண்டன் அணி தரப்பில் டோட்டின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.