Advertisement

தி ஹண்ரட் மகளிர் : சூப்பர் சார்ஜர்ஸை வீழ்த்தில் லண்டன் ஸ்பிரிட் அபார வெற்றி!

தி ஹண்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி அபாரா வெற்றியைப் பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 03, 2021 • 22:48 PM
 The Hundred Womens : London Spirit Women won by 7 wkts
The Hundred Womens : London Spirit Women won by 7 wkts (Image Source: Google)
Advertisement

தி ஹண்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் லண்டன் ஸ்பிரிட் மகளிர் - நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சூப்பர் சார்ஜர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணி ஜெமிமா ரோட்ரிக்ஸின் அபாரமான அரைசதத்தால் 100 பந்துகளில் 5விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரோட்ரிக்ஸ் 57 ரன்களைச் சேர்த்திருந்தார். 

Trending


இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லண்டன் ஸ்பிரிட் அணியில் தொடக்கத்தில் சில விக்கெட்டுகள் இழந்தாலும் டாமி பியூமண்ட் - டெண்ட்ரா டொட்டின் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 98 பந்துகளில் இலக்கை எட்டி அசத்தியுள்ளது. 

இதன் மூலம் லண்டன் ஸ்பிரிட் மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நார்த்தன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement