
The Hundred Womens: Southern Brave Women won by 8 wkts (Image Source: Google)
தி ஹண்ரட் மகளிர் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் - சதர்ன் பிரேவ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சதர்ன் பிரேவ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணி 100 பந்துகள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோன்ஸ் 42 ரன்களையும், எவ்லின் ஜோன்ஸ் 33 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சதர்ன் பிரேவ் அணியில் ஸ்மிருதி மந்தனா 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டேனியல் வையட் - சோபியா டாங்க்லி அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.