
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, கேப்டனாக கேஎல் ராகுல் முதல் வெற்றியை ருசித்துள்ளார். முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 189 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து, இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது.
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய கேஎல் ராகுல், “கிரிக்கெட் விளையாடாமல் இருந்த காலம், மிகவும் கடினமாக இருந்தது என்றார். நாங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருவதால், எங்களுக்கு காயமும் ஏற்படுவது சகஜம் தான்.
காயத்தில் இருந்த காலத்தில் நான் , குல்தீப் யாதவ் மற்றும் தீபக் சாஹர் மூன்று பேரும் பெங்களூருவில் ஒன்றாக இருந்து மூன்று பேரும் உடல் தகுதியை மீட்க கடுமையாக போராடினோம். மீண்டும் இந்திய அணிக்குள் வந்தது மகிழ்ச்சி. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவிசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். அணியாக அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடினோம்” என்று தெரிவித்தார்.