Advertisement

உலகக்கொப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25இல் தொடக்கம்!

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.

Advertisement
உலகக்கொப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25இல் தொடக்கம்!
உலகக்கொப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25இல் தொடக்கம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 10, 2023 • 01:55 PM

இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆந் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 10, 2023 • 01:55 PM

அதன்படி அக்.5ஆம் தேதி அஹ்மதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆனால் போட்டி அட்டவணை வெளியான சில நாட்களிலேயே பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ஆட்டங்களின் தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

Trending

இந்த நிலையில் மொத்தம் 9 போட்டிகளின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. ஆனால் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அன்றைய தினம் அங்கு நவராத்திரி கொண்டாட்டம் தொடங்குவதால் முக்கியமான இந்த போட்டிக்கு பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அந்த ஆட்டம் ஒரு நாள் முன்னதாக அதாவது அக்டோபர் 14ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறுகிறது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு போதுமான இடைவெளி கிடைக்க வேண்டும் என்பதற்காக இலங்கைக்கு எதிராக அந்த அணியின் ஆட்டம் அக்டோபர் 12ஆம் தேதிக்கு பதிலாக 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதே போல் பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையேயான லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டனில் நவம்பர் 12ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. அன்றைய தினம் உள்ளூரில் காளி பூஜை வெகுவிமரிசையாக நடக்க இருப்பதால் போதுமான பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என்று கொல்கத்தா போலீசார் கைவிரித்தனர். இதனால் அந்த ஆட்டம் இப்போது ஒரு நாள் முன்னதாக 11ஆம் தேதி நடக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 25ஆம் தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வருகிற 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை கிடைக்கும். 

அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15ஆம் தேதி விற்கப்படும். மேலும் ரசிகர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் வருகிற 15ஆம் தேதி முதல் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும். இது அவர்களுக்கு டிக்கெட் கிடைக்க கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement