
'The way he plays, it reminds me of Sehwag': Muralitharan (Image Source: Google)
இந்திய கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை போல அடுத்த தலைமுறையின் சிறந்த வீரராக பார்க்கப்படும் பிரித்வி ஷா, பயமே இல்லாமல் தனக்கே உரிய பாணியில் அடித்து ஆடி அனைவரையும் கவர்ந்துவருகிறார்.
இடையில் சில காலம் ஃபார்மில் இல்லாமல் இருந்த பிரித்வி ஷா, கடந்த ஐபிஎல் சீசனின் பாதியில், டெல்லி அணியின் ஆடும் லெவனிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆனால் சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே ஆகிய உள்நாட்டு தொடர்களில் அபாரமாக ஆடி தொடர்ச்சியாக சதங்களை விளாசி பல சாதனைகளையும் படைத்து தற்போது மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பிரித்வி ஷா, ஷிகர் தவானுடன் இலங்கைக்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.