
டெல்லி அணியில் 6 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக வீரர்கள் ஒரு பயிற்சி முகாமில் கூட பங்கேற்கவில்லை. டெல்லி அணியில் இடம்பெற்றிருந்த மார்ஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் கூட நிலவியது.
ஆனால் இத்தனை தடைகளையும் மீறி இன்று களம் கண்ட டெல்லி அணி பஞ்சாப்பை 115 ரன்களுக்கு சுருட்டி அசத்தியது. இதே போன்று பேட்டிங்கிலும் அதிரடி காட்டிய அந்த அணி 10.3 ஒவரில் வெற்றி பெற்று அசத்தியது. வார்னர் ஹாட்ரிக் அரைசதம் அடித்து தனது புஸ்பா ஸ்டைலில் வெற்றியை கொண்டாடினார்.
இதனிடையே, வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் ரிஷப் பந்த், “முதலில் எங்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எங்கள் அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானதாக தகவல் வந்தது. இதனால் நாங்கள் கொஞ்சம் அச்சப்பட்டோம். போட்டி ரத்து செய்யப்படலாம் என்று கூட பேச்சு அடிப்பட்டது. ஆனால், நாங்கள் அது பற்றி எல்லாம் கவனிக்க போவது இல்லை. போட்டியை மட்டும் பற்றி சிந்திப்போம் என்று முடிவு எடுத்தோம்.