
'They are backup players now, have served Indian cricket well': Former IND player makes big statemen (Image Source: Google)
இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர்களான அஜிங்கியா மற்றும் புஜாரா ஆகிய இருவரும் மிடில் ஆர்டரில் முக்கியமான வீரர்கள். ஆனால் அவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக சொதப்பிவருகின்றனர். மிடில் ஆர்டரில் அவர்களது சொதப்பலால் இந்திய அணி தோல்வியடைய நேர்கின்றது.
புஜாரா, ரஹானேவின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துவிடுகிறது. அண்மையில் கூட, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் ஆடி மொத்தமாகவே புஜாரா 124 ரன்களும், ரஹானே 136 ரன்களும் மட்டுமே அடித்தனர்.
இவ்வாறாக சீனியர் வீரர்களான புஜாராவும், ரஹானேவும் தொடர்ந்து சொதப்பிவரும் அதேவேளையில், ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில் அவர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்திவருகின்றனர்.