
‘They Consider Virat Great Player, Rohit Even Greater’: Shoaib Akhtar (Image Source: Google)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் அவ்வப்போது இந்திய அணியை பற்றி புகழ்ந்து பேசுவதை தொடர் வாடிக்கையாக வைத்துள்ளார். இருப்பினும் அவர் கூறும் கருத்துகள் சரியாக இருப்பதனால் அதற்கான வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
அந்த வகையில் தற்போது இந்திய அணியைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவரை பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குடன் மக்கள் ஒப்பிட்டு பேசி வருவதாக அவர் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “தற்போது உள்ள எந்த ஒரு பாகிஸ்தான் ரசிகரும் இந்திய அணி சிறப்பான அணி இல்லை என்று கூறுவதில்லை. எல்லோரும் இந்திய அணியை வெளிப்படையாகவே ஆதரிக்கின்றனர். விராட் கோலி ஒரு சிறந்த வீரர், அவரைவிட ரோகித் சர்மாவும் தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.