
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஃபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பாண்டியா, ராகுல் ஆகியோர் பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்திய கேப்டன் விராட் கோலி உள்பட பல்வேறு தரப்பினர் பாண்டியா-ராகுலை கடுமையாக கண்டித்தனர்.
சமூகவலைத்தளங்களிலும் இருவரையும் பலர் சாடினர். ஆஸ்திரேலியாவில் இருந்து இருவரையும் நாடு திரும்புமாறு பிசிசிஐ உத்தரவிட்டது. மேலும் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பிறகு, இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரி கடிதம் அளித்தனர். பெண்களைத் தரக்குறைவாக பேசிய விவகாரம் தொடர்பாக இருவருக்கும் தலா ரூ. 20 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ மத்தியஸ்தர் டி.கே. ஜெயின் உத்தரவிட்டார்.
இந்நிலையில் அக்காலகட்டம் பற்றி பேசிய ஹர்திக் பாண்டியா, “எனக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டபோது, என்னைத் தனிப்பட்ட முறையில் தெரிந்த, நான் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்த பல கிரிக்கெட் வீரர்கள் என்னைப் பற்றி பேசினார்கள். அது பரவாயில்லை. என் கதை முடிந்தது என அவர்கள் நினைத்தார்கள்.