
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. 2019-2021இல் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்தது. அந்த 2 ஆண்டு காலக்கட்டத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிகமான வெற்றிகளை பெற்று, அதிக வெற்றி சதவிகிதங்களுடன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும்.
அந்தவகையில் முதல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி நியூசிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது.
2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடந்துவருகிறது. இந்த நடப்பு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி 75 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், 70 சதவிகிதத்துடன் ஆஸ்திரேலிய அணி 2ஆம் இடத்திலும் உள்ளன. 3, 4, 5ஆம் இடங்களில் முறையே இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் உள்ளன.