SA A vs IND A, 3rd Test: மழையால் மூன்றாவது போட்டியும் டிரா!
தென் ஆப்பிரிக்கா ஏ - இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான மூன்றவது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்தது.
இந்திய ஏ அணி தென் ஆப்பிரிக்காவின் ப்ளூம்போண்டைனில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா ஏ அணியுடன் விளையாடி வருகிறது .
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா ஏ அணியின் கேப்டன் பீட்டர் மலன் பேட்டிங்யை தேர்வு செய்தார்.
Trending
அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .சிறப்பாக விளையாடிய சரேல் ஏர்வி 75 ரன்கள் எடுத்தார் .இந்திய அணி தரப்பில் தீபக் சாகர் 4 விக்கெட்களையும் , நவ்தீப் சைனி 3 விக்கெட்களையும் , கைப்பற்றினர்.
இதை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சற்று தடுமாறியது. . பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹனுமா விஹாரி - இஷான் கிஷான் இணை சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது.
சிறப்பாக விளையாடிய ஹனுமா விஹாரி 63 ரன்களிலும் , இஷான் கிஷன் 91 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 276 ரன்கள் குவித்தது.
அதன்பின் 8 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென் ஆபிரிக்க அணி 3 வது நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா ஏ அணி 3 விக்கெட் 311 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. சிறப்பாக விளையாடிய தென் ஆபிரிக்க வீரர் ஜுபைர் ஹம்சா சதம் அடித்தார்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய ஏ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டத்தை தொடர முடியாமல் போனது .
தென் ஆப்பிரிக்கா ஏ ,இந்திய ஏ அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும் இத்தொடரில் நடைபெற்ற மூன்று போட்டிகளுமே டிராவில் முடிந்ததால், கோப்பை இரு அணிக்கு வழங்கப்பட்டது.
Win Big, Make Your Cricket Tales Now