
நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது. பெங்களூரில் நடைபெற்ற முதல் இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களும் டிரா ஆனது. 3ஆவது ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணி 86.4 ஓவர்களில் 293 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெயிக்வாட், அபாரமாக விளையாடி சதமடித்தார். 127 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
உபேந்திர யாதவ் 76 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து ஏ அணியின் மேத்யூ ஃபிஷர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்ஸில் 71.2 ஓவர்களில் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மார்க் சாப்மேன் 92 ரன்கள் எடுத்தார். செளரப் குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.