‘இது என்னை கொல்வது போல் உள்ளது’- டு பிளெஸிஸ் மனைவி உருக்கம்!
பிஎஸ்எல் தொடரின் போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஃபாஃப் டூ பிளெஸிஸ் குறித்து அவரது மனைவி இமாரி விஸ்ஸர் இன்ஸ்டாகிராமில் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அபுதாபியில் நடந்து வரும் பி.எஸ்.எல் தொடரின் 19ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ், பெஸ்வர் ஸால்மி அணிகள் விளையாடின. இப்போட்டியின் போது டேவிட் மில்லர் அடித்து பந்து பவுண்டரியை நோக்கிச் செல்ல அதனைத் தடுப்பதற்கு ஃபாஃப் டூ பிளெஸிஸ் முயற்சித்தார்.
அப்போது சக அணி வீரரான முகமது ஹஸ்னைனும் பந்தை தடுப்பதற்கு எதிரே வந்துள்ளார். இது டூ பிளெஸிஸ், ஹஸ்னைன் மீது மோதி சுருண்டு விழுந்ந்தார். உடனடியாக களத்திற்கு வந்த அணி மருத்துவர் டூ பிளெஸிஸிக்கு சிகிச்சையளித்தார். அதன்பின் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் டூ பிளெஸிஸின் மனைவி இமாரி விஸ்ஸர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘இது இப்போது என்னைக் கொல்வது போல் உள்ளது. நிச்சயமாக அவரை மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டுமா???’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் டூ பிளெஸிஸின் உடல்நிலை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகததால், அவர் விரைந்து குணமடைய வேண்டுமென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now