Advertisement

டி20 உலகக்கோப்பை: ஷமியை இழிவுப்படுத்தும் ரசிகர்கள்; சேவாக் காட்டம்!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்ததற்கு முகமது ஷமியின் மோசமான பந்துவீச்சே காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் அவரை இழிவுபடுத்தியுள்ளார்கள்.

Advertisement
This needs to stop: Irfan, Harbhajan, Chahal rally support behind Shami following online abuse
This needs to stop: Irfan, Harbhajan, Chahal rally support behind Shami following online abuse (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 25, 2021 • 06:30 PM

இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராகத் தனது முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான். இதுவரை டி20, ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் 13 முறை பாகிஸ்தான் அணி தோல்வி கண்டிருந்தது. இந்த முறையும் தோல்வி காணும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் கேப்டன் பாபா்-ரிஸ்வான் இணையின் அதிரடி ஆட்டத்தால் வரலாற்றை மாற்றியது பாகிஸ்தான். 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 25, 2021 • 06:30 PM

துபை சா்வதேச மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 151/7 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17.5 ஓவர்களில் 152 ரன்களைக் குவித்து அபார வெற்றி பெற்றது.

Trending

இந்திய அணியின் மோசமான தோல்விக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியே முக்கியக் காரணம் எனச் சமூகவலைத்தளங்களில் அவரை இழிவுபடுத்தி பதிவுகள் எழுதப்பட்டுள்ளன. நேற்றைய ஆட்டத்தில் 3.5 ஓவர்கள் வீசிய ஷமி 43 ரன்கள் கொடுத்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களில் அதிக ரன்களை கொடுத்தவர் இவர்தான்.

இதையடுத்து ரசிகர்கள் சில தங்கள் சமூகவலைதள பக்கங்களில் முகமது ஷமியை மோசமாக விமர்சித்து வருகின்றனர். மேலும் ஷமியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் நூற்றுக்கணக்கான பேர் ஷமியைத் துரோகியாகச் சித்தரித்து மத ரீதியிலான பதிவுகள் எழுதியுள்ளார்கள். 

இந்திய அணிக்குத் துரோகம் செய்ததால் அவரை அணியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் எழுதி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். இதையடுத்து முன்னாள் வீரர் ஷேவாக், இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங் உள்பட பலரும் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இந்திய அணி ஷமிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு அவரை இழிவுபடுத்தும் ரசிகர்களுக்குப் பதிலடி தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement