Advertisement

தோனியைப் பற்றி தவறாக கணித்த நோர்ட்ஜே!

2010 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் போது தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன் என்று அன்ரிச் நோர்ட்ஜே தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 09, 2021 • 09:12 AM
'Thought Dhoni Didn't Know How To Bat': Anrich Nortje Recalls His First Meeting With Former Indian C
'Thought Dhoni Didn't Know How To Bat': Anrich Nortje Recalls His First Meeting With Former Indian C (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே. இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்து வீசிய பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். 

இந்நிலையில், 2010 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் போது தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன் என்று அன்ரிச் நோர்ட்ஜே தெரிவித்துள்ளார்.

Trending


இது குறித்து விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அன்ரிச் நோர்ட்ஜே "தென் ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் டி20 லீக் நடைபெற்றபோது தோனிக்கு வலையில் பந்து வீசினேன். அப்போது அவர் சில பந்துகளை கால்களை நகர்த்தாமல் விளையாடினார். அப்போது நான் தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன். அப்போது எனக்கு வயது மிகக் குறைவு. ஆனால் அதன் பின்பு தான் தெரிந்தது தோனி மிகச் சிறந்த வீரர் என்று" என தெரிவித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அதன் பின்பு, அதே ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பங்கேற்று கோப்பையையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement