நியூசிலாந்து குறித்த விமர்சனத்திற்கு மன்னிப்பு கோரிய டிம் பெய்ன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணியை ஏளனமாக பேசியதற்காக, அந்த நாட்டு ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.
மழையின் காரணமாக ட்ராவை நோக்கி சென்றுகொண்டிருந்த போட்டியை, தங்களது அசாத்திய திறமையின் மூலமாக வென்று காட்டியிருக்கும் அந்த அணியை, அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், பல கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.
Trending
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணியை ஏளனமாக பேசியதற்காக, அந்த நாட்டு ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து வானொலி ஒன்றில் பேசிய டிம் பெய்ன், “சில நேரங்களில் நாம் பேசுவது மற்றவர்களால் தவறாக புரிந்துகொள்ளப்படும். அதுபோல தான் நியூசிலாந்து ரசிகர்களும் நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டார்கள்.
இருந்தாலும் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு சிறிய நாடாக இருக்கிறபோதும் நியூசிலாந்து அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர்கள் விளையாடுவதைப் பார்ப்பது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்.
இறுதிப் போட்டியில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் அணியை சிறந்த முறையில் வழிநடத்தி சென்றிருக்கிறார். இனிவரும் காலங்களிலும் அவ்வாறே அவர் செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now