
ஐபிஎல் உள்பட பல டி20 லீக் கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் பிரபலம் அடைந்துள்ளன. இதில் விளையாடும் வீரர்களுக்கும் அதிக அளவில் பணம் கொடுக்கப்படுகிறது.
இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை காட்டிலும் இதுபோன்ற தொடர்களில் விளையாட வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் நினைத்ததுபோல் லீக் போட்டிகளில் விளையாட முடியாது. மத்திய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, கிரிக்கெட் வாரியம் என்சிஓ அளித்தால் விளையாடுவதில் பிரச்சினை இருக்காது.
தற்போது நியூசிலாந்து கிரிக்கெட்டின் மத்திய ஒப்பந்தத்தில் இருநது டிரென்ட் போல்ட், மார்ட்டின் கப்தில், ஜிம்மி நீஷம் ஆகியோர் வெளியேறியுள்ளனர். மார்ட்டின் கப்தில் பிக் பாஷ் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியிடம் கேட்கப்பட்ட போது, கிரிக்கெட் சூழல் மாறிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.