
TNPL 2021 : Chepauk Super Gillies finish with 120 on the board (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 28 ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் விளையாடிவருகிறது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதையடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர் கௌஷிக் காந்தி, ஜெகதீசன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து களமிறங்கிய ராதாகிருஷ்ணன் அதிரடியாக விளையாட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. இருப்பினும் ராதாகிருஷ்ணன் அரைசதம் கடந்து அசத்தினார்.