
TNPL 2021: CSG have now confirmed their place in the playoffs (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சேப்பாக் அணி ராஜகோபால் சதிஷின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ராஜகோபால் சதீஷ் 64 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சைத் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.