
TNPL 2021 : Dindigul complete a convincing victory (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் அணி ஹரி நிஷாந்த் - விவேக் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக விவேக் 59 ரன்களையும், ஹரி நிஷாந்த் 52 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி தொடக்கம் முதலே சீரன இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் முருகன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 47 ரன்களை சேர்த்தர்.