
TNPL 2021 : Dindigul Dragons finish with 186 on the board (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் அணியில் அருண் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹரிநிஷாந்த் - விவேக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விவேக் 36 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பின் 59 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விவேக் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மறுமுனையில் அரைசதம் அடித்திருந்த ஹரி நிஷாந்த் 52 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.