
TNPL 2021 Eliminator : Dindigul Dragons Faces off Lyca Kovai Kings (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் vs லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதிபெறும். அதேசமயம் தோல்வியடையும் அணி நான்காம் இடத்தப் பிடிக்கும்..
நடப்பு சீசனில் ஷாரூக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது. அதிலும் அந்த அணியில் சாய் சுதர்சன், கங்கா ஸ்ரீதர் ராஜு, சுரேஷ் குமார் ஆகியோர் தொடர்ந்து பேட்டிங்கில் அசத்தி வருவது அணியின் வெற்றிக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.