டிஎன்பிஎல் 2021: மான் பாஃப்னா அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்ற திருப்பூ!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீசியது.
இதையடுத்து களமிறங்கிய நெல்லை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூர்ய பிரகாஷ் 43 ரன்களைச் சேர்த்தார். திருப்பூர் அணி தரப்பில் முகமது, ராஜ்குமார் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Trending
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணியில் முகமது ஆஷிக், துஷர் ரஹெஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த சித்தார்த் - மான் பாஃப்னா இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.
இதில் சித்தார்த் 41 ரன்களில் ஆட்டமிழக்க, மான் பாஃப்னா அரைசதம் கடந்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாஃப்னா 72 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி, நடப்பு சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய மான் பாஃப்னா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now