
TNPL 2021 : Lyca Kovai Kings beat Nellai Rayol Kings by 7 runs (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி கேப்டன் ஷாருக் கானின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாருக் கான் 64 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் கடின இலக்கை துரத்திய நெல்லை அணிக்கு அபாரஜித் - சூர்யபிரகாஷ் இணை சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. பின் 28 ரன்களில் அபாரஜித் ஆட்டமிழக்க, 36 ரன்களில் சூர்யபிரகாசும் விக்கெட்டை இழந்தார்.