
TNPL 2021: Lyca Kovai Kings won by 8 wkts (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரின் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய திருச்சி அணி சத்விக், ராஜகோபால் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கோவை அணிக்கு தொடக்கம் முதலே கங்கா ஸ்ரீதர் ராஜு - சாய் சுதர்சன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது.