
TNPL 2021 : Madurai Panthers have won by 81 runs (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பீல்டிங் செய்தது.
இதையடுத்து களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 184 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சத்துர்வெத், ஜெகதீசன் கௌசிக் ஆகியோர் தலா 41 ரன்களைச் சேர்த்தனர்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய திருப்பூர் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் அந்த அணியின் 9ஆம் வரிசை வீரர் ராஜ் குமாரைத் தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை.