
TNPL 2021 : Madurai Panthers set a target on 125 runs (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 22ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய மதுரை அணியில் பிரவின் குமார், சுஜிந்திரன், அணிருத் சிதா ராம், அருண் கார்த்தி என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இருப்பினு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சதுர்வேத் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 70 ரன்களில் சதுர்வேத் ஆட்டமிழக்க, அடுத்த வந்த வீரர்கள் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர்.