
TNPL 2021 : Nellai Royal Kings won by 5 wkts (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணியில் ஹரி நிஷாந்த், சஞ்சய் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த மணி பாரதி - ஸ்ரீநிவாசன் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மணி பாரதி 30 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்து ஸ்ரீநிவாசன் அரைசதம் கடந்து அசத்தினார்.