
TNPL 2021 Qualifier 2 : Chepauk Super Gillies vs Dindigul Dragons (Image Source: Google)
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் போட்டிகள் கடந்த 8ஆம் தேதியுடன் முடிந்தன. இதன் முடிவில் திருச்சி வாரியர்ஸ் முதல் இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2ஆவது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 3ஆவது இடத்தையும், கோவை கிங்ஸ் 4ஆவது இடத்தையும் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இதன் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் 10ஆம் தேதி தொடங்கியது. அன்று நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் திருச்சி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.