
TNPL 2021 Qualifier 2: Dindigul Dragons Bowled out 103 (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணிக்கு விமல் குமார் - ஹரி நிஷாந்த் இணை களமிறங்கியது. இதில் விமல் குமார் 11 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒருமுனையில் விக்கெட்டுகளை சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹரி நிஷாந்த் அரைசதம் அடித்து அசத்தினார். பின் அவரும் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.