
TNPL 2021 : Ruby Trichy Warriors face off Thiruppur Thamizhans today (Image Source: Google)
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்தொடரின் லீக் போட்டிகளிலேயே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதால், அடுத்தடுத்த போட்டிகள் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்தில் இருக்கும் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், 6ஆவது இடத்திலிருக்கும் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு சீசனில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பங்கேற்ற 4 லீக் ஆட்டங்களில் 2 வெற்றி, 2 தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்தில் நீடித்து வருகிறது.