
TNPL 2021: Ruby Trichy Warriors won by 3 wkts (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று மாலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மதுரை அணி ஜெகதீசன் கௌசிக்கின் நிதான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை எடுத்தது.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய திருச்சி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் அதித்தியா கனேஷ் - ஆதன் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.