
TNPL 2021: Ruby Trichy Warriors won by 7 wkts (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 14 ஆவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் அணி, எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனால் 20 ஓவர்கள் மிடிவில் 8 விக்கெட்டுகளை 110 ரன்களை மட்டுமே எடுத்தது. திருச்சி அணி தரப்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.