டிஎன்பிஎல் 2021: முகமது ராஜ் குமார் பந்துவீச்சில் சரிந்த நெல்லை!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய நெல்லை அணியின் கேப்டன் பாபா அபாரஜித் 14 ரன்களிலும், ரஞ்சன் பால் 20, இந்தராஜித் 26 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
Trending
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் சூர்யபிரகாஷ் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 43 ரன்களில விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் நெல்லை அணியின் ரன் கணக்கு சரிந்தது.
இறுதியில் அர்ஜுன் மூர்த்தி ஒருசில பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்ட, 19.5 ஓவர்கள் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக சூர்யபிரகாஷ் 43 ரன்களையும், அர்ஜுன் மூர்த்தி 35 ரன்களையும் சேர்த்தனர். திருப்பூர் அணி தரப்பில் ராஜ் குமார், முகமது தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now